என் தொட்டில் நிலா !
நீ தொடும் தொலைவில்
புன்னகை பூக்கும்
என் பால்நிலா!
நம் சிறிய வீடு இன்று
புன்னகை பூக்கும்
என் பால்நிலா!
நம் சிறிய வீடு இன்று
உன்னால் பெரிய வானம் ஆனது!
நம் வானில்
நேற்று ஒலி ஒளியை கடன் வாங்கிய ஜன்னல்கள்
இன்று உன்னால் உலகுக்கு தானம் செய்கிறது.
மேகங்களுக்கு பதில் உன் அன்னையின் நிழல்கள்
அங்கும் இங்கும் அலைகின்றன!
அங்கும் இங்கும் அலைகின்றன!
இடி இசைக்கு முன்பே
பால்மழை பொழிகின்றன!
சில சமயம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் உன்
அன்னைக்கு உன்னை காட்டி அல்லவா
நான் சோறு ஊட்டுகிறேன்
என் தேன்நிலா !!
உன் கண்கள் இரண்டும் நீர் இல்லாமல் வாழ
அன்னைக்கு உன்னை காட்டி அல்லவா
நான் சோறு ஊட்டுகிறேன்
என் தேன்நிலா !!
உன் கண்கள் இரண்டும் நீர் இல்லாமல் வாழ
கற்றுகொண்ட அழகிய இரு மீன்கள் !
ஆனந்த கண்ணீர்க்கு மட்டும்
விதிவிலக்கு!!
உன் பிஞ்சு விரல்கள் தொடும் பொழுது
என் நெஞ்சு இனிக்கின்றது.
நீ கொஞ்சி பேசும் மழலைமொழி கேட்க
ஒரு வருடம் ஆகுமாம்.
இந்த பூமி ஏன் இவ்வளவு மெல்லமாக சுழல்கிறது?
சிறிது கோவம்தான் !
ஒரு வேலை நீ பிறந்த மகிழ்ச்சியில் சூரியனிடம்
விடுமுறை வின்னப்பித்ததோ ??
என் பவளமுத்தே!
என் பவளமுத்தே!
நீ பால் குடிக்க எழுப்பும் பல்லவிக்கு என்னால்
வரிகள் கொற்க முடியவில்லையே.
விண்வெளியில் உள்ள வாலியை பிடித்துவரவா!
வையகத்தில் வாழும் வைரமுத்துவை அழைத்துவரவா !!
காற்றில் இலைகலையும் ,கடல் அலைகலையும்
ரசித்துஇருந்த நான் !
இன்று உன் சின்னஞ் சிறு கைகால் அசைவுகளுக்கு
அடிமையாகிவிட்டேன்!!
மனதுக்குள் பெய்யும் மழை சாரலே!
என் வண்ணமயிலே!
காற்றில் இலைகலையும் ,கடல் அலைகலையும்
ரசித்துஇருந்த நான் !
இன்று உன் சின்னஞ் சிறு கைகால் அசைவுகளுக்கு
அடிமையாகிவிட்டேன்!!
மனதுக்குள் பெய்யும் மழை சாரலே!
என் வண்ணமயிலே!
கல்வியில் நீ கலைவாணி
ராகத்தில் நீ கல்யாணி
வீரத்தில் நீ ஒரு ஜான்சி ராணி
அன்பில் நீ பிரம்மன் விட்ட சிகரம் தொட்டு
நல்ல பண்பில் ஆழம் கண்டு
கார்த்திகை தீபம்போல் உன் உவகை எங்கும் மிளிர
உனக்கு ஜெய்ஷிவானி என்று பெயர் சூட்டினேன்